Saturday, December 4, 2010

காயம்…!

மிச்சமாய் இருக்கும்
ஒற்றைக் கால் கூட
அதிஸ்டம் என்றான நிலை
ஏன்எனில்
இரண்டு கால்களும்
பலருக்கு இங்கே தறிக்கப்பட்டே
இருக்கிறது….

பிச்சைக்காரனின் துணிபோல
முகம் எங்கிலும்
ஒட்டுக்காயங்கள்.

முகங்கள்
தறிக்கப்பட்டவருக்கு முன்னால்
அதுகூட அதிஸ்டமாகிறது…!.

உலக வரைபடம் போல
உடலெங்கும் தையல்கள்.
இதை
விகாரமாக யாரும் நினைப்பதேயில்லை
அனைவருக்கும் பொதுவான
அடையாளம் என்பதால்

மாடுகளுக்கு குறிசுடுவதைப்போல
உடலெங்கம்
சன்னம் கிழித்த கோடுகள்.

அங்கவீனர்களுக்காக
மட்டும் தான் இட ஒதுக்கீடு எனில்
இங்கே
அனைவருக்கும்
இடம் ஒதுக்கியே ஆகவேண்டும்….!

--கவிதை மட்டுவில் ஞானக்குமாரன்

No comments:

Post a Comment