Thursday, November 25, 2010

கவிஞனை நினைக்கக் கவலையாக இருக்கிறது.

பரணிபாடிய
தமிழ் கவிஞன்தான்
இப்போது
பரண்மீதேறி குறட்டை விடுகிறான்.

ஓடிவந்த காவேரி
ஆற்றைப் பாடியவனே
நடிகை காவேரியை பாட்டால்
வியக்கிறான்

சுட்டும் விழிச்சூரியனை கட்டிப்போடக்
கோலெடுத்தவனே
கட்டும் சேலை மடிப்பிலே
கசங்கிப் போனான்.

சேரன் சபையிலே
கவிச்சரன் கட்டியவனே
விஐயன் சபையிலே பாவாடை நாடா
கட்டுகிறான்

யுகப்புரட்சிபற்றி
பாட்டெழுதக் கிளம்பியவனே
சினிமா
தாரகைகளின்
தசைத் திரட்சிபற்றிப் பாட்டெழுதிக்
கிழிக்கிறான்.

-மட்டுவில் ஞானக்குமாரன்

No comments:

Post a Comment