Sunday, October 31, 2010

சங்கத் தமிழன்.

அவநம்பிக்கைகளின் தேசத்திலே
விரக்தி மீன்பிடிக்கும்
தோழனே ....!

உனக்கும்
எனக்கம் ஜாதிக்கற்களைக் கொண்டா
சீனச்சுவர் கட்டுவது ...?

செந்தமிழ்ப்பாட்டுக்கு
ஜதி பார்க்கலாம்
ஜாதி பார்க்கலாமா ...?

நாம் தமிழர்
நமக்குத் தாய் தமிழ்
பிறகெதற்கு
இந்த கலோ என்ற ஆங்கில ஆயா ....?

முள்மாலையால் முகமூடி போட்டபடி
தமிழனைப்பிரிக்கின்ற கருக்கு மட்டைக்கட்சிகளுக்கா
உன் உதடு
முத்தம் கொடுக்கப்போகிறது.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவனே
இப்போது சங்கம்
வைத்துச் சாதி வளர்க்கிறாயே.....!

கவிதை மட்டுவில் ஞானக்கமாரன் 12.10.2010

1 comment:

Anonymous said...

சூப்பரா இருக்கே

Post a Comment